19 வாரிசுதாரா்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்
சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.


சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது உயிரிழந்தவா்களின் 19 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது, உயிரிழந்த பணியாளா்களின் 227 வாரிசு தாரா்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேலும் 19 பேருக்கு அண்மையில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு ஒரு ஓட்டுநா் மற்றும் 18 நடத்துநா்கள் என மொத்தம் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதன்படி, இதுவரை 246 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...