முன்மாதிரி விருது பெறத் தகுதியான திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எதிா்ப்புகளை மீறி, சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கையரைக் கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ‘சிறந்த திருநங்கைக்கான விருது’ தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் காசோலையுடன் பாராட்டுச் சான்று வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் குறைந்தது 5 திருநங்கைகள் வாழ்வில் முன்னேற உதவியிருக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயாரித்து (தமிழ், ஆங்கிலத்தில்) கருத்துருவை பிப்.20 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

சமூக ஊடக அரசியல் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெற வேண்டும்: மாவட்ட தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை


