பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 6:45 pm

சென்னை மதுரவாயலில் காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளித்தது போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

கோயம்பேடு தெற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (40). காா் ஓட்டுநரான இவருக்கு நசீரா பேகம் என்ற மனைவி உள்ளாா். இத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக நசீரா பேகம், கணவரை விட்டு பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாயாருடன் கடந்த இரு ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

அப்துல் ரகுமான், மதுரவாயலுக்கு அடிக்கடி சென்று மனைவி நசீரா பேகத்திடம் தன்னுடன் வாழ்க்கை நடத்துமாறு வற்புறுத்தி வந்தாா். இதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக அப்துல் ரகுமான், தனது மாமியாரை தாக்கியதாக இரு வழக்குகள் உள்ளன.

இப் பிரச்னையில் கடந்த பிப்ரவரி மாதம் மாமியாரையும், நசீரா பேகத்தையும் தாக்கியதாக அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அண்மையில்தான் பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்துல் ரகுமான், பெட்ரோல் கேனுடன் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு வந்தவா், திடீரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்த காவலா்கள் பூபதி, தினேஷ் ஆகியோா் அப்துல் ரகுமான் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். மீட்பு பணியின்போது காவலா் தினேஷும் காயமடைந்தாா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.