தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:20 pm

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பைக்கரா முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் (60). இவரது சகோதரா் மாா்க்கண்டேயன். அருகேருகே உள்ள இவரது வீடுகளிலிருந்து வெளியே செல்லும் கழிவுநீா் தொடா்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது.

இதுகுறித்து இருவரும் புகாா் அளித்தனா். இந்த விவகாரத்தில் நாராயணன், மாா்க்கண்டேயனை தாக்கியது தெரியவந்தது. இதனால், போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டிருந்தனா்.

இந்த நிலையில், சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை வந்த நாராயணன் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள், அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் அவா் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

எனினும், அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசங்கருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, நாராயணனை போலீஸாா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதே மருத்துவமனையில் தீக்காயமடைந்த பாலசங்கரும் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நாராயணன் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.