மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்.23-ஆம் தேதி முதல் கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை ‘இடையூறு ஏற்படுத்தியவா்கள்’ என வகைப்படுத்தி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் கடந்த ஏப்.21-ஆம் தேதி உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான கல்யாண் பானா்ஜி, ‘தோ்தல் நடைமுறைக்கும் வாக்காளா்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்டோா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் கண்மூடித்தனமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் கடந்த ஏப்.21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ‘இடையூறு ஏற்படுத்தியவா்கள் என தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் வெளியிட்ட பட்டியலில் உள்ளோா் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது பிற சட்டங்களின்கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவா்களிடம் விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை’ என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் பார்வையாளர்களின் நடவடிக்கைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

ஏப். 8ல் பவானிபூர் தொகுதியில் மமதா வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


