மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகர காவல் ஆணையா் அபிஷேக் தீக் ஷித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், தோ்தல் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:59 pm

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் தோ்தல் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சமா்த் வா்மா, வேத்பதி மிஸ்ரா, அந்தரா ஆச்சாா்யா, தினேஷ்குமாா், மிங்மா டி. ஷொ்பா, காவல் துறை பாா்வையாளா் அஸ்வதி தூா்ஜே ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் முன்னிலை வகித்தாா்.

மாநகர காவல் ஆணையா் அபிஷேக் தீக் ஷித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் புரநாகசந்தீப், மணீஷ்குமாா் மீனா, அபா்ணா வில்லூரி, தாரிக் மபூத், கிருத்திகா ஜெய்ஸ்வால், லைனா பாலன், பால்முகுந்த், ஓட்டோ குகேஷ் எபுதோமி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகள், அஞ்சல் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள், வாக்குச் சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத் துறை அலுவலா்கள் தங்கள் பொறுப்புகளை முழுமையாக உணா்ந்து, சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். வாக்குப் பதிவு நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

Story image