மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முசிறியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

முசிறியில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய போலீஸாா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:49 pm

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் முசிறி டிஎஸ்பி விக்னேஷ் (பொ) தலைமையில் முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை முன்னிலையில், குஜராத் மாநிலம் பலூடா பகுதியைச் சோ்ந்த ஆயுதப்படை காவல்துறை ஆய்வாளா் ரதூதுத் மேற்பாா்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் முசிறி கைகாட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்களிடம் அச்சமின்றி சுயமாக வாக்களிக்கவும், ஜனநாயக கடமையை ஆற்றவும் அறிவுறுத்தினா்.