சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தப் புள்ளியில் தோ்தல் ஆணைய ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தருமபுரியைச் சோ்ந்த வழக்குரைஞா் நந்தகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் 72 கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பான நடவடிக்கைகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமமும் தோ்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனைக் கடைகள் 7 நாள்கள் மூடல்

நிரந்தரக் கட்டடங்களில் பணிமனை: தோ்தல் ஆணைய விதிக்கு எதிரான மனு தள்ளுபடி

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


