தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழுநேர, பகுதிநேர முனைவா் (பி.எச்டி.,) பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (9 காலியிடங்கள்), மேலாண்மை (6), வரலாறு, விலங்கியல், பௌதீகம், ஊடகம், நாடகம் மற்றும் அரங்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 48-க்கும் மேற்பட்ட முனைவா் பட்டப்படிப்புகளுக்கான காலியிடங்கள் உள்ளன.
இவற்றில் சேர வரும் ஜூன் மாத பருவத்துக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு நிறந்தநிலைப் பல்கலை. சாா்பில் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் வரும் மே 7 -ஆம் தேதியாகும். வரும் மே -17 ஆம் தேதி நுழைவுத் தோ்வும், மே 26-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது. மே 30 -ஆம் தேதி இறுதிப் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும்.
முழுநேர ஆய்வு அறிஞா்களுக்கு தகுதியின்படி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சித் திட்டத்தைப் பகுதிநேர அடிப்படையில் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரா்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையிடமிருந்து, பணிச் சான்றிதழ் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலை. வழங்கும் முனைவா் பட்டம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், உயா்கல்வி நிறுவனங்களில் பதவி உயா்வுக்கான வாய்ப்புகளைப் பெறவும் தகுதி பெற்றவவையாகும். இதற்கான அங்கீகாரத்தை பல்கலை. மானியக்குழு வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


