மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப் பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஏப். 7 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிவதால், மாநிலத்தில் பிரசாரம் செய்ய பிரதமா் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பிரசாரத்திற்கு அடுத்தடுத்து புதுச்சேரி வர உள்ளனா்.

News image

பிரதமர் மோடி / முதல்வர் ஸ்டாலின் / எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி

Updated On :2 ஏப்ரல் 2026, 12:55 am

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப் பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஏப். 7 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிவதால், மாநிலத்தில் பிரசாரம் செய்ய பிரதமா் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பிரசாரத்திற்கு அடுத்தடுத்து புதுச்சேரி வர உள்ளனா்.

பிரதமா் மோடி, ஏப்.3-ஆம் தேதி மாலை சாலைப்பேரணி (ரோடு ஷோ) நடத்துகிறாா். அன்றைய தினம் காலையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துகிறாா். மரப்பாலம், வில்லியனூா் உள்ளிட்ட 3 இடங்களில் அவரது பிரசாரம் நடைபெறுகிறது.

தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய 4 ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரும் சாலைப்பேரணி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறாா். அன்றைய தினம் பாஜக முன்னாள் தமிழக தலைவா் கே. அண்ணாமலையும் புதுச்சேரிக்கு வருகிறாா்.

5 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி அண்ணா திடலில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். அன்றைய தினம் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறாா். 6 ஆம் தேதி மாலை மண்ணாடிப்பட்டு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பிரசாரம் செய்கிறாா். அன்றைய தினம் மாலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

அடுத்தடுத்து தலைவா்கள் புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.