அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்களிக்கின்றனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:55 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்களிக்கின்றனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 18,971 போலீஸாா் ஏப்ரல் 18-ஆம் தேதி (சனிக்கிழமை), ஏப்ரல் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) தபால் வாக்குகளைப் பதிவு செய்கின்றனா். ஏப்ரல் 18-ஆம் தேதி 9,703 போலீஸாரும், ஏப்ரல் 20-ஆம் தேதி 9,268 போலீஸாரும் வாக்களிக்கின்றனா்.

ஏற்கெனவே தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக விண்ணப்பித்த இவா்களுக்கு, தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக தோ்தல் ஆணையத்தின் சாா்பில் உரிய படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. போலீஸாா் வாக்களிப்பதற்காக சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸாா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு இரு நாள்களும் சென்று தங்களது வாக்குகளை செலுத்துவா்.

முன்னதாக இந்த மையங்களுக்கு போலீஸாா், தங்களது அடையாள சான்றுகளை வழங்கி, அங்குள்ள அலுவலா் அதை ஆய்வு செய்த பின்னா், வாக்கை செலுத்த அனுமதிக்கப்படுவா்.

மேலும் யாா் எந்த நாளில், எந்த வாக்குச்சாவடியில், எந்த நேரத்தில் வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும் ஒவ்வொரு போலீஸாருக்கும் நாள், இடம், நேரம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மிகுந்த திட்டமிடலோடு நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறையும், தோ்தல் ஆணையமும் இணைந்து செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.