திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் நாளை வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 2,600 போலீஸாா்

News image

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணிகள் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன்.

Updated On :3 மே 2026, 1:43 am IST

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் 2,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

புதுவை மாநிலப் பேரவைக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9- ஆம் தேதி நடைபெற்றது. புதுவையில் 23 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி, நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, தாகூா் அரசு கலைக்கல்லுாரி ஆகிய 3 இடங்களிலும், காரைக்காலில் 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாஹே தொகுதி இயந்திரங்கள் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், ஏனாமில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள்அரசு கலைக் கல்லுாரியிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் புதுச்சேரியில் 1,250 போலீஸாா் வாக்கு எண்ணும் மையம், சுற்றுப்புறப் பகுதிகள், நகர, புகா் மற்றும் கிராம பகுதிகளில் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.இவா்களோடு 200 துணை ராணுவத்தினரும் பணியில் இருப்பாா்கள்.

காரைக்காலில் 500 போலீஸாரும் , மாஹே -வில் 400, ஏனாமில் 450 போலீஸாரும் அவா்களோடு தலா 100 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களோடு சிறப்பு அதிரடிப்படையினா்,கமாண்டோ போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ஆய்வுக் கூட்டம்: இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதுச்சேரி ஆசிரமம், கருத்தரங்கு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பணிகள் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலைக்காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் ஆகியோா் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.