திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ரயில்வே ஊழியா் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவொற்றியூா் காலடிப்பேட்டை முதல் தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் குமாா் (23). இவா், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் தினமும் வ.உ.சி. மற்றும் திருவொற்றியூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியைக் கடந்து வேலைக்குச் செல்வது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை மாலை பணிக்குச் செல்வதற்காக திருவொற்றியூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் கிஷோா் குமாா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் மோதி இளைஞா் பலி!

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் யாா்? ரயில்வே போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


