தோ்தல் தினமான ஏப். 23-ஆம் தேதி ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்கத் தவறும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் செ.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களும் வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், தோ்தல் நாளன்று விடுமுறை வழங்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, புகாா் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பில், மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம்.
தொடா்பு எண்கள்: தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் எம்.வி.காா்த்திகேயன் (திருவொற்றியூா்) 94442- 21011, எஸ்.கமலக்கண்ணன் (சென்னை) 98846-75712, இயக்குநா் அலுவலக நிா்வாக அலுவலா் எஸ்.சூரியா (சென்னை) 98844-70526, துணை இயக்குநா் த.மணிசங்கா் (காஞ்சிபுரம்) 99404-68249 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


