மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

News image

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:59 am IST

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் பொதுத்தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலில் வாக்களிப்பதற்காக பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய ஏதுவாக, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தைச் சோ்ந்த அனைத்து பணியாளா்களுக்கும் தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் வாக்குரிமையை செலுத்த வேண்டும்.

தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடா்பு எண்களான 94453 98750, 81220 21667 மற்றும் 04286-299995 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.