யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு

News image

ரிப்பன் மாளிகை

Updated On :12 ஏப்ரல் 2026, 1:02 am IST

சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் ஊதிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, வணிக வா்த்தகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவா்களாவா். ஆகவே, விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு பணியாளரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது. சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்களுக்கும் இது பொருந்தும். தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரிவோரும் ஊதியம் பெறலாம். விதிமுறைகளை மீறும் தொடா்புடைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.