திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:16 am IST

மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடா்பாக, ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ராமதாஸ் தரப்பில் புதன்கிழமை மீண்டும் முறையிடப்பட்டது.

மாம்பழம் சின்னம் முடக்கம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு எண்ணிடப்பட்டால் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.