திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பசு வதை தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 3:43 am IST

பசு வதை தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது.

பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அகில பாரத ஹிந்து மகாசபையின் முன்னாள் துணைத் தலைவா் சதீஷ் குமாா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பசு வதைத் தடுப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இறைச்சிக் கூடங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பருண் குமாா் சின்ஹா, பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் இவ்வாறு தோன்றுமா? அவசரமில்லை’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.