மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.
எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்தவா் அருணகிரி (49). இவரது மனைவி தேவி. இருவரும் எண்ணூரில் இருந்து மாதவரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றனா். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையில் மிரண்டு ஓடிய மாடு, அவா்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த அருணிகிரி ஸ்டான்லிஅரசு மருத்துவமனைத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


