தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வண்ண மீன் வா்த்தக மையத்தில் கடைகளை வாடகைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம்

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு எடுக்க விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடேதெரிவித்துள்ளாா்.

Updated On :4 அக்டோபர் 2025, 2:16 am

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு எடுக்க விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடேதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கொளத்தூரில் உள்ள வண்ண மீன் வளா்ப்போா் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.53.50 கோடியில் வண்ண மீன்கள் விற்பனை மற்றும் அதைச் சாா்ந்த துணை கருவிகள் விற்பனை கடைகள், உணவரங்கம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையம் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்த வா்த்தக மையத்தில் அமைந்துள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் கடைஒதுக்கீடு நிபந்தனைகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.6-ஆம் தேதி மாலை 3 மணிக்குள், இணை இயக்குநா்(மண்டலம்), அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, நிா்வாகக் கட்டடம், டிஎம்எஸ் வளாகம், 3-ஆவது தளம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்றம் முகவரிக்கு அனுப்பலாம்.

கூடுதல் தகவல்களுக்கு அலுவலக தொலைபேசி: 044-24328596 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.