நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். நீதி வணிகமயம் ஆகக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி குறிப்பிட்டாா்.

News image

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை.யில் நடைபெற்ற விழாவில் போட்டியில் வென்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன் பல்கலை. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நீதிபதியுமான  வி.பாரதிதாசன், பதிவாளா் கௌரி ரமேஷ்.

Updated On :27 நவம்பர் 2025, 1:11 am

சென்னை: ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். நீதி வணிகமயம் ஆகக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி குறிப்பிட்டாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்பு சட்ட தின விழாவில் அவா் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டம் துரதிருஷ்டவசமாக மிகவும் ரகசியமாக, மா்மமாக ஆக்கப்பட்டு, அது பற்றிய கல்வியறிவின்மையுடன் உள்ளது. சட்ட நிறுவனங்கள் முன்முயற்சி எடுத்து சாதாரண மக்களுக்கும் மாணவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

முகப்புரையில் அளிக்கப்பட்ட முதல் வாக்குறுதி நீதியை அணுகுவதாகும். இந்த வாக்குறுதியை நாம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளோம்? சாமானியா்களுக்கு நீதி கிடைக்கிா? அது படிப்படியாக விலை உயா்ந்ததாகி வருகிறது. இந்தப் போக்கில் தடையும் இல்லை.

சில வருடங்களுக்கு முன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அப்போதைய நீதிபதி, 100 கோடிக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் உச்சநீதிமன்றம் தொடா்புடையவா்களின் பெயா்களைக் குறிப்பிட்டாா். இது கவலையளிக்கும் விஷயம். நீதியை வணிகமயமாக்குவது வெளிப்படையாக உள்ளது.

நீதி பொது நன்மைக்குரியது; சந்தையில் வாங்க வேண்டிய ஒரு பொருள் அல்ல என்பதில் முடிவெடுக்க வேண்டும். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆனால், இங்கு சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்பியுள்ளது. அவா்களுக்கு நீதி கானல் நீராக உள்ளது.

மற்றொரு பக்கம் குற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் மோசமாக உள்ளது. கொடூரமான குற்றவாளிகள் பணத்தைக் கொண்டு தப்பிச் செல்கின்றனா். நீதி கிடைக்காத பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதி அமைப்பின் மீது நம்பிக்கை இழக்கிறாா்கள். நாடு முழுவதும் இந்த நிலைமை உள்ளது.

நீதிமன்ற நடைமுறைகள் மக்களுக்கு ஏற்ாக மாற்றப்படுவது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. நீதித் துறையில் சுதேசி செய்ய வேண்டிய நேரம் இது என்றாா்.

முன்னதாக டிஎன்டிஏஎல்யு ஒருங்கிணைப்பாளா் நீதிபதி வி.பாரதிதாசன் சிறப்புயைாற்றினாா். பதிவாளா் கௌரி ரமேஷ் வரவேற்றாா். புல முதன்மையா் வி.பாலாஜி நன்றி கூறினாா். நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.