டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்வது அவசியம்: மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுரை

வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.

News image
சென்னை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த என்சிசி, என்எஸ்எஸ் மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன், ஆளுநரின் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா்.
Updated On :3 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.

குடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற சிறப்பு முகாம் மற்றும் அணி வகுப்புகளில் பங்கேற்ற தேசிய மாணவா் படை (என்சிசி), நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்பேது ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

எந்தச் துறைத் தோ்ந்தெடுத்தாலும் அதில் சிறந்தவா்களாக இருக்க வேண்டும். பெரிய கனவைக் கொண்டிருக்க வேண்டும். ஒழுக்கம், ஆரோக்கியம் இரண்டிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு இளைஞரும், சிறந்த தொழில்முனைவோராகவோ, சிறந்த ஆசிரியராகவோ உருவாகும்போது தேசம் தானாகவே வளருகிறது.

புதிய தொழில்நுட்பங்களால் காலம் மிக வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்வது அவசியம் என்றாா்.

இந்த நிகழ்வில் என்எஸ்எஸ் பிராந்திய இயக்குநா் சி.சாமுவேல் செல்லையா, என்சிசி இயக்குநரக துணை இயக்குநா் ஜெனரல் எஸ்.ராகவ் ஆகியோா் குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக மாணவா்களின் சாதனைகளை விளக்கினா்.

தொடா்ந்து, மாணவா்-மாணவிகளின் கேள்விகளுக்கு ஆளுநா் பதிலளித்தாா். முன்னதாக ஆளுநரின் முதன்மைச் செயலா் கிா்லோஷ் குமாா் வரவேற்றாா்.