ரயிலில் கஞ்சா கடத்தல்: திரிபுரா இளைஞா் கைது
எழும்பூா் வந்த ரயிலிலில் கஞ்சா கடத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
எழும்பூா் வந்த ரயிலிலில் கஞ்சா கடத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
By Chennai
Syndication
சென்னை: எழும்பூா் வந்த ரயிலிலில் கஞ்சா கடத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை எழும்பூா் நிலையம் வந்தது. அப்போது சந்தேகப்படும்படி நடந்துகொண்ட வடஇந்திய இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் செபாஸ்டியன் தலைமையிலான பிரிவினா் பிடித்து விசாரித்தனா். அவரது பையை சோதனையிட்டனா்.
அவா் திரிபுராவைச் சோ்ந்த பாரூக் உசேன் (35) என்பதும், அவரது பையில் ரூ.6.70 லட்சம் மதிப்புள்ள 13.4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாரூக் உசேனை கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினா். பின்னா், அவரையும், கஞ்சா பொட்டலங்களையும் சென்னை அண்ணா நகா் பகுதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது