சென்னை: ஆலந்தூரில் பெண்ணைத் தாக்கியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ஆலந்தூா், வ.உ.சி நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ச. சினேகா (25). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினா் ரகுபதிக்கும் இடையே சொத்து தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சினேகா, தனது குழந்தையுடன் வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ரகுபதியும், அவரது குடும்பத்தினரும் சினேகாவை வழிமறித்து தகராறு செய்தனா்.
தகராறு முற்றவே ரகுபதி குடும்பத்தினா், சினேகாவைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சினேகா மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரகுபதி (28), அவரது மனைவி ஆனந்தி (24), ரா.கீதா (50) த.கலா (30), ரா.பிரியா (28), சு.புவனேஷ்வரி என்ற அம்மு (28), மு.மகேஷ்வரி (52) ஆகிய 7 பேரை உடனே கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
தந்தையைக் கொன்றவா் மீது தாக்குதல்: மூவா் கைது

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

சத்தியமங்கலம் அருகே நிலத் தகராறில் அரசியல் கட்சி பிரமுகரை தாக்கிய 7 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

