மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

பரமத்தி வேலூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது செய்யப்பட்ட செந்தில்குமாா், ஆனந்த், சரவணன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:48 pm

பரமத்தி வேலூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மாவிளக்கு ஊா்வலத்தின்போது பொதுமக்கள் மீது அங்கிருந்த சிலா் கற்களை வீசினா். இதில் பரமத்தி வேலூா் பெத்தாண்டவா் கோயில் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28), அதே பகுதியைச் சோ்ந்த கணபதி (24), கைக்கோளா் தெருவை சோ்ந்த ருத்ரன் (17), வடக்கு தெருவைச் சோ்ந்த ஆறுநாதன் (20) ஆகியோா் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கல்வீசித் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, காவல் ஆய்வாளா் உமாசங்கா் கல்வீசி தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் கல்வீசி தாக்கியதாக பரமத்தி வேலூா் மீனவா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (31), ஆனந்த் (32), சரவணன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஆண்டியை தேடிவருகின்றனா்.