தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை நகரின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க திட்டம் இருக்கிறது: ஆனால் நிதி?

நீர் சேமிப்புத்திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை நீர்வளத்துறை சமர்ப்பித்தாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக திட்டங்கள் தாமதமாகின்றன.

News image

சென்னை நகரின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க திட்டம் இருக்கிறது: ஆனால் நிதி?

Updated On :8 பிப்ரவரி 2023, 12:16 pm



சென்னை: சென்னை பெருநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நகரின் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தி, நீர் சேமிப்புத்திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை நீர்வளத்துறை சமர்ப்பித்தாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக திட்டங்கள் தாமதமாகின்றன.

கூடுதலாக 20.50 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையில், சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக ரூ.22,004 கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் இருக்கும் ஆறு நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் இருப்பு அளவு 13.2 டிஎம்சி. ஆனால், சென்னையின் ஒட்டுமொத்த நீர்த்தேவை என்பது 22 டிஎம்சி.

இதற்கிடையே, மாநில அரசு கணித்திருப்பதன்படி, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அடுத்த 10 ஆண்டுகளில்  ஆண்டுதோறும் நீர்த்தேவை அதிகரித்து 32 டிஎம்சியாக இருக்கும். எனவே, நீர்வளத்துறை, ஆய்வுகளை நடத்தி, சின்ன சின்ன நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் திட்டங்களை வகுத்துள்ளது.

ஓராண்டுக்கு முன்பே, இது தொடர்பான ஆய்வறிக்கைகைள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படாததால், திட்டங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில் ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம், சென்னையின் குடிநீர் தேவைக்கும் இருப்புக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.