குடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு
குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் 24 மணி நேரமும் விமான நிலையத்தைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.
வெடிகுண்டு கருவிகள் மூலமும் மோப்ப நாய்களை கொண்டும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் சோதனை செய்தனா். இதனால் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...