நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

தீவுத்திடலில் நிரந்தர வர்த்தக வளாகம் அமைக்கப்படுமா?

சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள தீவுத்திடலில், நிரந்தர வர்த்தக வளாகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள், பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

News image
சென்னை தீவுத்திடலை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக மரப்பாலம்.
Updated On :24 ஜனவரி 2024, 6:38 pm

எஸ். பாண்டியன்

சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள தீவுத்திடலில், நிரந்தர வர்த்தக வளாகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள், பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளையும், தொடர்ந்து இடிந்து விழும் பாலத்தை உறுதியானதாகவும் அமைக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திடல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பொருள்காட்சி, தீபாவளி பட்டாசுக் கடைகள் அமைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த இடம் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் வகையில் நெருக்கடியில்லாத இடமாகவும் விளங்குகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் அடிக்கடி போக்குவரத்து வசதியும் அதிகமாக உள்ளது.
பல கோடி ரூபாய் வருவாய்: பொருள் காட்சி உள்பட ஆண்டுக்கு 220 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சித் துறைக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி முதல் ரூ.8.5 கோடி வரையில் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வருவாயை மேலும் கூட்ட முடியும் என்பதோடு, பொதுமக்களையும் அதிக அளவில் ஈர்க்க முடியும் என்கின்றனர் வியாபாரிகள்.
தாற்காலிக பாலம்: குறிப்பாக, தீவுத் திடலில் கூவம் ஆற்றுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள மரப் பாலம், அடிக்கடி இடிந்து விழுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டபோது, மரப்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 50 பெண்கள் ஆற்றுக்குள் விழுந்து பலத்த காயமடைந்தனர்.
தீவுத்திடலில் ஒவ்வொரு முறையும் பொருள்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது மட்டும் ரூ. 3 லட்சம் வரை செலவு செய்து இந்தப் பாலம் தாற்காலிகமாக அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் பாலம் 70 நாள்களுக்கு மட்டுமே தாங்கக் கூடியது என்கின்றனர் அதிகாரிகள்.
நிரந்தர வளாகம்: மேலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கும்போது அரங்குகள் தாற்காலிகமாக அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகள் அமைக்க ரூ.2 கோடி வரை மொத்தமாக ஒப்பந்தம் விடுகின்றனர். இதுபோன்ற தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கும் வகையில் தீவுத் திடலில் நிரந்தர வர்த்தக வளாகம், பாலம் அமைக்க வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.
இதுகுறித்து சென்னை மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ரகுமான் கூறியதாவது:-
தீபாவளியின்போது தீவுத்திடலில் அமைக்கப்படும் பட்டசு அரங்குகளை எடுப்போர், அவற்றை அப்படியே பயன்படுத்த முடியாது. தாற்காலிகமாக அரங்கின் பரப்பளவுக்கு கேற்ப அமைக்க ரூ.1 லட்சம் முதல், ரூ.3 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்தக் கடைகள் மழை நேரத்தில் ஒழுகுவதால் பாதிப்புக்குள்ளாகும் நிலையுள்ளது. இதனால் வியாபாரம் பாதிப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மழை வெயிலைத் தாங்கக் கூடிய வகையில் நிரந்தர வளாகம், பாலம், குடிதண்ணீர், சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம் என உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
அரசிடம் திட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு: இதுகுறித்து சுற்றுலாத்துறை (பொருள்ôட்சி பிரிவு) அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீவுத்திடலில் ஒரு பகுதியான 14 ஏக்கர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமாகும். இதற்காக ஆண்டுக்கு ஒரு முறை பொதுப்பணித்துறைக்கு வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் மற்றொரு பகுதியான 8 ஏக்கர் மட்டுமே சுற்றுலாத்துறைக்கான இடமாகும். இந்த இடம் பள்ளமாக இருப்பதால் மழை பெய்தால் உடனடியாக வெள்ள நீர் புகுந்து குளமாவதை தடுக்க மேடாக்கப்பட்டு வருகிறது.
மேலும் வருவாய் அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் நிரந்தரப் பாலம், வர்த்தக வளாகங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தலா ரூ.3 கோடியில் நிரந்தரமாக 2 இரும்பு பாலம் அமைப்பதற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. நிதி ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.