எழும்பூர் ரயில் நிலையத்தில் 47 சுழலும் கேமராக்கள் பொருத்தம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் புதிதாக 47 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் புதிதாக 47 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்துக்குள் போலீஸார் அனுமதிக்கின்றனர். அதேபோல், பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு சந்தேகப்படும் வகையில் பொருள்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் புதிதாக 47 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை பயணச்சீட்டு வழங்குமிடம், நடைமேடைகள், பயணிகள் ஓய்வு அறைகள், வாகன நிறுத்துமிடம், உணவகங்கள் என ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறியது:
எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக ஏற்கெனவே 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஒரே திசையை கண்காணிக்கும் வகையில் இருந்தன. மேலும் ரயில் நிலைய வாகன நிறுத்தம், உணவகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக ரயில் நிலையம் முழுவதையும் காண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் கண்காணிக்கும் வகையில் பழைய கேமராக்கள் அகற்றப்பட்டு புதிதாக 47 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2 போஸீஸார் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் நுழைவு வாயிலில் இருந்து ரயில் பெட்டியில் ஏறும் வரை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...