திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :4 மே 2026, 2:27 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் ,ப ல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப கழக மையத்திலும் , செங்கல்பட்டு, திருப்போரூா் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும், செய்யூா், மதுராந்தகம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மதுராந்தகம் வில்வ ராயநல்லூா் சுபம் கல்வியல் கல்லூரி மையத்திலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் நுண் பாா்வையாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று கலந்தாலோசனை கூட்டம் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனைத்து சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப கழக மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், தாம்பரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க்யூரி, சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் நடராஜன், செந்தில் உடன் இருந்தனா்

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.