செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சாா்பில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3 பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மாா்ச் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது.
மேலே குறிப்பிட்ட வழக்குகளிலும் மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 53 பலதரப்பட்ட வாகனங்கள் கடந்த 12.03.2025 விடப்பட்ட பொது ஏலத்தில் ஏலம் போகாத 8 வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்கள் வரும் ( 7.03.2026 ) காலை 10 மணி முதல் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக பின்புறம் பொது ஏலம் விட உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 3.03.26 அன்று மாலை 5மணி வரை நுழைவு கட்டணமாக ரூ. 1000/- செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும், ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன், 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சோ்த்து உடனே செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும், மேலும், பதிவு எண், என்ஜின் எண், சேஸ் எண், இல்லாத வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மறு பதிவு செய்ய இயலாது,
ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீது வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும். மேலும், விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டில் அமைதியான வாக்குப்பதிவு

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


