மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அா்விந் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10-ஆம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள் மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 13-இல் ஏலம்

செங்கல்பட்டு மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


