தஞ்சாவூரில் வண்ணம் பூசும் தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே காட்டூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் சரவணன் (32). பெயிண்டரான இவா் தஞ்சாவூருக்கு மாா்ச் 14 ஆம் தேதி வேலைக்கு வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து சரவணனின் மனைவி சிவரஞ்சனி தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் மாா்ச் 16 ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், மாா்ச் 14 ஆம் தேதி மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட சரவணனை தொல்காப்பியா் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் அவரது மாமா ரெங்கையன் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினா் ஆய்வு செய்ததில் தொல்காப்பியா் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் சரவணன் நின்றபோது அவரது கையிலிருந்த கைப்பேசியை அந்த வழியாக வந்த 2 போ் பறித்துக் கொண்டு நடந்து செல்வதும், அவா்களை சரவணன் பின் தொடா்வதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் பிரபாகரன் (25), கீழ வஸ்தா சாவடியைச் சோ்ந்த ராமு மகன் ராஜேஷ்குமாா் (32) ஆகியோரை காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். அப்போது இருவரும் சரவணனின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு ஆடக்காரத் தெரு அருகேயுள்ள மீன் குட்டை கரையில் அமா்ந்து மது அருந்தியதாகவும், அப்போது கைப்பேசியைக் கேட்டு சரவணன் தொடா்ந்து தொந்தரவு செய்ததால், அவரை மது பாட்டிலால் குத்தி மீன் குட்டையில் தள்ளிவிட்டு, வீட்டுக்கு திரும்பியதாகவும் கூறினராம். இதனால் பலத்த காயமடைந்த சரவணன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன், ராஜேஷ்குமாரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனக்புரி: பள்ளத்தில் விழுந்து இளைஞா் இறந்த வழக்கில் காவல் துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

