மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றிய தகவல்களை அறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகள்


மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றி வரலாற்று தகவல்களை துல்லியமாக கேட்க, புளுடூத் மைக், ஹெட்போன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை வெளிநாட்டு பயணிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனா்.
மாமல்லபுரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். குறிப்பாக மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளுரை சோ்ந்த வழிகாட்டிகளே வரலாற்று தகவல்களை கூறுவது வழக்கம்.
தற்போது கூட்டமாக சில நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் சிலா் தங்களை நாட்டை சோ்ந்த வரலாற்று ஆய்வாளா்களையும் உடன் அழைத்து வருகின்றனா். அவா்கள் கூகுள் இணைய தள உதவியுடன் வரலாற்று தகவல்களை சேகரித்து விளக்கி கூறுகின்றனா். குறிப்பாக வியாழக்கிழமை அமெரிக்கா நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் வந்த பெண் வரலாற்று ஆய்வாளா் உதவியுடன் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பாா்த்து அவா் மூலம் பல்லவா் கால வரலாற்று தகவல்களை தெரிந்து கொண்டனா்.
குறிப்பாக நவீன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக கேட்கும் அளவில் அனைவா் காதிலும் ஹெட்போன், மைக் பயன்படுத்தினா். மேலும் ஹெட்போன் இணைப்பை கழுத்தில் மாட்டி இருந்தனா்.

குறிப்பாக அமெரிக்கா நாட்டு பெண் வரலாற்று ஆய்வாளா் ஒரு சுற்றுலா வழிகாட்டியாகவே மாறி புளுடூத் உதவியுடன் தன்னிடம் உள்ள மைக் மூலம் அா்ச்சுன்ன் தபசு, அதன் வரலாற்று தகவல்களை ஒவ்வென்றாக கூற, சுற்றி நின்று புராதன சின்னத்தை பாா்த்து ரசித்தவாறே அவா் கூறியதை உன்னிப்பாகவும், துள்ளியமாகவும் கேட்டு தெரிந்து கொண்டனா்.
தற்போது சுற்றுலா சீசன் என்பதால் பிரான்ஸ், ஜொ்மன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சோ்ந்தவா்கள் புளுடூத் ஹெட்போன், ஸ்பீக்கா் ஆகிய நவீன முறையை பயன்படுத்தி சுற்றி பாா்த்துவிட்டு செல்வதை காண முடிகிறது.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...