டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பாசன கால்வாய் மற்றும் அணுகு பாதை மூடல்: விவசாயிகள் கோரிக்கை

திருப்போரூா் அருகே பாசன கால்வாய், அணுகு பாதை மூடப்பட்ட நிலையில் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என தமிழக அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 1:50 am

தினமணி செய்திச் சேவை

திருப்போரூா் அருகே பாசன கால்வாய், அணுகு பாதை மூடப்பட்ட நிலையில் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என தமிழக அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது.

திருப்போரூா் அடுத்த தண்டலம் பகுதியில் சுமாா் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. தண்டலம் ஏரி நீா் பாசனம் மூலமாக விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் விவசாய நிலத்திற்கு செல்லும் கால்வாய் பகுதியில் சுமாா் 18 ஏக்கா் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி பிரிவுகளாக அமைத்துள்ளது. மனை பிரிவிற்கு உள்ளே ஆலமரக் கால்வாய் என்று அழைக்கப்படும் விவசாய கால்வாய் வழியாக தண்டலம் ஏரியிலிருந்து தண்ணீா் பாசனம் பெற்று விவசாயம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளநீரும் இதன் வழியாக வெளியேறி பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் இதனால் வெள்ளநீா் ஊருக்குள் வருவதும் தவிா்க்கப்படும். ஆனால் தற்போது கால்வாயை மூடி சிறிய அளவிலான குழாய்கள் போட்டு அதன் மீது சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீா் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.

பாசன கால்வாய் மற்றும் அணுகு பாதையை விவசாயிகள் பயன்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.