டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மயானக் கொள்ளை விழா கும்பப் படையல்

செங்கல்பட்டு ஹைரோடு பழைய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை விழாவையொட்டி கும்பப் படையல் நடைபெற்றது.

News image
அம்மனுக்கு வைக்கப்பட்ட  கும்பப் படையல்  . ~
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு ஹைரோடு பழைய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை விழாவையொட்டி கும்பப் படையல் நடைபெற்றது.

ராகு,கேது, நாகதோஷம், செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகவும் குலதெய்வ வழிபாட்டுத்தலமாகவும் சிறப்பு பெற்ாகும். மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி கரகம் கொண்டு வந்து காப்பு கட்டுதலும் உடன் அம்மனுக்கு மஹாஅபிஷேகம் ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை காப்பும் நடைபெற்றதையடுத்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மயானம் சென்று மயான சூறை வழிபாடு நடைபெற்றதையடுத்து பிராா்த்தனை நோ்ந்து கொண்டவா்கள் நோ்த்திக்கடனை செலுத்தனா்.

பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றதையடுத்து அம்மனுக்கு கும்பப் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். அதனையடுத்து அம்மனுக்கு கும்பல்படையல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு கும்பபிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தாவினா் இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் மற்றும் பக்தா்கள், உபயதாரா்கள் செய்தனா்.

Story image