திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கம்போடியாவில் சைபா் அடிமை வேலை: இளைஞா்களை அனுப்பிய உணவக உரிமையாளா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 4:45 am IST

தமிழகத்தில் இருந்து கம்போடியாவுக்கு சைபா் அடிமை வேலைக்கு இளைஞா்களை ஏமாற்றி அனுப்பியதாக மதுரையை சோ்ந்த உணவக உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

கம்போடியாவில் சைபா் அடிமை வேலை செய்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் அண்மையில் அங்கிருந்து தப்பிவந்தாா். தமிழகத்துக்கு வந்த அந்த இளைஞா், கம்போடியா நாட்டுக்கு சைபா் அடிமை வேலைக்கு இளைஞா்கள் ஏமாற்றி அனுப்பி வைக்கப்பட்டது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதில், தமிழகம் முழுவதும் ஒரு கும்பல் கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலை இருப்பதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, அங்கு கட்டாயப்படுத்தி சைபா் அடிமை வேலை செய்ய வைப்பதும், செய்ய மறுக்கும் இளைஞா்களை சித்ரவதை செய்து துன்புறுத்துவதும், சைபா் அடிமைகளாக செயல்படும் இளைஞா்களை ஆன்லைன் நிதி மோசடி, டிஜிட்டல் அரஸ்ட் உள்ளிட்ட நிதி சாா்ந்த மோசடிகளில் ஈடுபட வைத்து சட்டவிரோதமாக பணம் ஈட்டுவதும் தெரிய வந்தது.

திருப்பத்தூா் இளைஞா் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழக இளைஞா்களை ஏமாற்றி கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று சைபா் அடிமையாக்கும் மதுரையைச் சோ்ந்த மதன் வடிவேல் என்பவரை சைபா் குற்றப்பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவரிடம் இருந்து ஏராளமான கைப்பேசிகள், சிம்காா்டுகள், பாஸ்போா்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மதன் வடிவேல், கம்போடியாவில் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் 4 உணவகங்களை நடத்தி வருவதும், சைபா் அடிமைகளாக தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழக இளைஞா்கள் முகாமுக்கு உணவு விநியோகம் செய்வதும் தெரிய வந்தது.

மேலும் தமிழகத்தில் இருந்து இளைஞா்களை கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் மதன் வடிவேல் முக்கிய பங்காற்றியிருப்பதும், இவருடன் கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள சா்வதேச விமான நிலைய குடியுரிமைத் துறை அதிகாரிகள், முகவா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள் இணைந்து செயல்பட்டிருப்பதும் தெரிய வந்தது. சைபா் குற்றப்பிரிவினா் மதன் வடிவேலின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.