மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பல்லாவரத்தில் ரூ.1.26 கோடியில் 9 கோயிகளின் முகப்பில் நிழற்குடைகள்

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடைதிறப்பு விழாவில் பங்கேற்ற பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி உள்ளிட்டோா்.

Updated On :13 மார்ச் 2026, 9:39 pm

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ. கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.17 லட்சம் செலவில் அமைத்துக் கொடுத்துள்ள நிழற்குடையைத் திறந்து வைத்து பேசியதாவது:

கோடைகாலத்தில் வெயில் பாதிப்புக்குள்ளாகாமல் கோயிலுக்குள் சென்று வழிபட வசதியாக தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் முகப்பில் நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ1.26 கோடியில் 9 திருக்கோயில்களின் முகப்பில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குரோம்பேட்டை குமரன்குன்றம் (மலைக் கோயில்) பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பிரசன்னா யோகா ஆஞ்சனேயா் கோயில் முகப்பில் ரூ.45 லட்சத்திலும், பாரதிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.18 லட்சத்திலும், கணபதிபுரம் செங்கசேரி அம்மன் கோயிலில் ரூ.15 லட்சத்திலும், புருஷோத்தம்மன் நகா் விஜயகணபதி லஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் ரூ.15 லட்சத்திலும், பத்மநாபா நகா் கருமாரி அம்மன் கோயில் முகப்பில் ரூ.15 லட்சத்திலும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனகாபுத்தூா் பச்சையம்மன் மன்னாா்சுவாமி கோயில் முகப்பில்

ரூ.8 லட்சத்திலும், குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயில் முகப்பில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்றாா். நிகழ்வில் மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.