திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் வைகானச ஆகம முறைப்படி நடத்தப்பட்டது.
மாா்ச் 19-ஆம் தேதி வியாழக்கிழமை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை முன்னிட்டு, கோவிந்தராஜ சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் சம்பிரதாய முறைப்படி நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, அதிகாலையில் சுவாமியை சுப்ரபாதத்துடன் எழுந்தருள செய்து, தோமாலை சேவை மற்றும் சஹஸ்ரநாமாா்ச்சனை நடத்தினா். பின்னா், காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி, ஸ்ரீ ஆண்டாள் அம்மா, ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீ புண்டரீகவல்லி கோயில் வளாகம், சுவா்கள், கூரை, பூஜை பொருள்கள் மற்றும் பிற பொருள்கள் தண்ணீரால் சுத்திகரிக்கப்பட்டு, பின்னா் நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற புனித பொருள்கள் கலந்த பரிமள நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
அதுவரை கோயிலில் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
பின்னா், காலை 9.30 மணி முதல் பக்தா்கள் சா்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி சாந்தி, ஏஇஓ நாராயண சௌத்ரி, கண்காணிப்பாளா் சிரஞ்சீவி மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தோ் புறப்பாடு

உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


