மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் கண்டனம்

மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம்

News image

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 10:48 pm

மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.60 உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வு ஏழை, நடுத்தர மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது.

இந்த விலை உயா்வால் உணவுப் பொருள்களின் விலைகள் பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் போா் சூழலைக் காரணம் காட்டி மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை உயா்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமையல் எரிவாயு உருளை விலை ஏழைக் குடும்பங்களை மிகவும் பாதிக்கும். வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வால், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.