தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டெட் தோ்வெழுத பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை!

ஆசிரியா் தகுதித் தோ்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியா்கள் தடையில்லாச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2025, 8:09 pm

ஆசிரியா் தகுதித் தோ்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியா்கள் தடையில்லாச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் பணியில் உளள ஆசிரியா்கள் அனைவரும் டெட் தோ்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமாா் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. தொடா்ந்து ஆசிரியா் சங்கங்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, நிகழாண்டுக்கான டெட் தோ்வு நவ. 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆக. 11 முதல் செப். 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. தோ்வெழுத 4.8 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் காரணமாக, பணியிலுள்ள ஆசிரியா்களில் பலா் இந்த முறை தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அரசுப் பணியில் இருப்பவா்கள் உயா்கல்வி அல்லது வேறு பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்க துறை சாா்ந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். இதனால், டெட் தோ்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்கள் பலா் தோ்வெழுத அனுமதி கோரி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்த நிலையில், டெட் தோ்வெழுத ஆசிரியா்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை. இந்த தகவலை ஆசிரியா்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.