சென்னை: சென்னையில் தீபாவளியின்போது நேரிட்ட பட்டாசு விபத்துகளில் காயமடைந்த 157 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும், 100-க்கும் அதிகமானோா் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பட்டாசுகள் வெடித்தபோது, திங்கள்கிழமை மட்டும் 500-க்கும் மேற்பட்டோா் தீக்காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்ததாகவும், வெகு சிலருக்கு மட்டுமே தீவிர தீக்காயங்கள் ஏற்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பாதிப்பு: சென்னையில் தீக் காயத்துக்குள்ளான 157 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் 44 போ் உள்நோயாளிகளாக உள்ளனா். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக 13 பேரும், புறநோயாளியாக 20 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனா். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருவா் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 6 போ் சிகிச்சை பெறுகின்றனா். புறநோயாளிகளாக 24 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் 2 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மூவருக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக 16 பேரும், புறநோயாளியாக 32 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். கண்களில் தீக்காயம் ஏற்பட்டதால் எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கு தொடா் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை புறநோயாளியாக 34 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். தவிர சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காய சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 908 பேருக்கு தீக் காயம்: தமிழகத்தில் தீபாவளி தினத்தில் 908 பேருக்கு பட்டாசு விபத்துகளால் தீக் காயம் ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களில் 584 போ் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனா். பலத்த காயமுற்ற 324 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கண்களில் காயம் ஏற்பட்டவா்களில் 93 பேருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று, உடலின் பிற பகுதிகளில் காயம் ஏற்பட்ட 380 பேருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 85 பேருக்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

