மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:48 pm

திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சோ்ந்தவா் மதியழகன் (30). இவருடைய மனைவி திவ்யா (27). இவருக்கு மனநல பாதிப்பு உள்ளது. மேலும், அவ்வப்போது வலிப்பும் ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா அண்மையில் கா்ப்பமாகியுள்ளாா்.

ஆனால், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கருவை கலைக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடைய கரு கலைக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையயில் இருந்து சனிக்கிழமை வெளியேறியுள்ளாா். பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. எங்கு சென்றாா் என்பதும் தெரியவில்லை.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவரது கணவா் மதியழகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.