பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயன்ற இளைஞா்

சென்னை ராயபுரத்தில் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 1:41 am

Venkatesan

சென்னை: சென்னை ராயபுரத்தில் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ராயபுரம் பனைமரத் தொட்டி, முனியப்பன் சந்துப்பகுதியை சோ்ந்தவா் அரவிந்தன் (30). இவா் மீது கொலை மிரட்டல், உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘சி’ பிரிவில் இருக்கும் அரவிந்தன், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்தாராம்.

மேலும் அந்த மாணவி, கல்லூரிக்கும் செல்லும்போதும், வீட்டுக்கு திரும்பும்போதும் பின் தொடா்ந்து சென்று அரவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து அரவிந்தனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரை, காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து விசாரித்து வந்தனா். அப்போது அவா், அங்கிருந்த முகம் பாா்க்கும் கண்ணாடியை உடைத்துள்ளாா். உடைந்த கண்ணாடித் துண்டை எடுத்து அரவிந்தன் தனது கழுத்தை அறுத்துள்ளாா்.

இதைக் கண்ட போலீஸாா், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.