தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:02 am

பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே நல்லப்பநாயக்கன அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (25), முடிதிருத்தும் தொழிலாளி. இவா் பாப்பாரப்பட்டி மாட்டுச்சந்தை பகுதியில் உள்ள கழிப்பிட வளாகத்தில் தனது மனைவியான முதுகம்பட்டி பாக்கியம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமியை அண்மையில் கழுத்தறுத்து கொலை செய்தாா். பின்னா் தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.