நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு

காரைக்கால், நவ. 16: காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, வெளியே எடுத்துச் செல்லப்படும் நிலக்கரி, வெள்ளை களிமண் போன்றவற்றால் காரைக்கால் பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ÷காரைக்கால

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:13 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், நவ. 16: காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, வெளியே எடுத்துச் செல்லப்படும் நிலக்கரி, வெள்ளை களிமண் போன்றவற்றால் காரைக்கால் பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

÷காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரில் தனியாருக்குச் சொந்தமான கப்பல் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறைமுகம் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதியையே முழுமையாகக் கையாள்கிறது. குறிப்பாக, இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, தமிழகத்திலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு ரயில் மூலமும், லாரிகள் மூலமும் கொண்டு செல்லப்படுகிறது.

÷ரயில் சேவையால் பொதுமக்களுக்கு அதிகமான பாதிப்பு இல்லையென்றாலும், லாரிகளில் கொண்டு செல்லப்படும் நிலக்கரியால் காரைக்கால் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

÷துறைமுகப் பகுதியில் நிலக்கரியை மலைபோலக் குவித்து வைத்திருப்பதால், அவை காற்றில் பறந்து, சுற்றுவட்டார மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், லாரிகள் நிலக்கரியை கட்டுப்பாடின்றி அதிகமாக ஏற்றிச் செல்லும்போது, சாலை வளைவுகளில் நிலக்கரி சிதறுகிறது. இதன்மூலம் சாலை விபத்து ஏற்படுவதோடு, நிலக்கரியை உரிய முறையில் மூடி எடுத்துச் செல்லாததால், அவை இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீது விழுந்து காயமேற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

÷கடந்த 12 ஆம் தேதி மத்திய அமெரிக்க நாடான பெலிஸிலிருந்து எம்வி போரா என்ற கப்பல், 8900 மெட்ரிக் டன் வெள்ளை களிமண்ணை காரைக்கால் துறைமுகத்தில் கொண்டு வந்து இறக்கியது. இந்தக் களிமண்ணை காரைக்காலில் இயங்கி வரும் டைல்ஸ் கற்கள் தயாரிப்பு தொழிற்சாலையினர் ஒப்பந்ததாரர்கள் மூலம் இரவு, பகலாக லாரிகளில் எடுத்துச் சென்று தங்களது இடங்களில் சேமித்து வைக்கின்றனர்.

÷இந்நிலையில் களிமண் சரியான பாதுகாப்பு முறையின்றி லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாலும், அந்த லாரிகள் அதிவேகமாகச் சாலையில் செல்வதாலும் நெடுஞ்சாலை முழுவதும் இந்தக் களிமண் சிதறிக் கிடக்கிறது. மழை பெய்யும் போது, இந்தக் களிமண்ணால் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.

÷நிலக்கரி, வெள்ளை களிமண் ஆகியவற்றால் காரைக்கால் மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி, மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

÷ஆனால், பொருள்களை ஏற்றிச் செல்வதில் உள்ள குறைபாடுகளைத் தாங்கள் சரிசெய்ய முடியாது எனத் துறைமுக நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

÷இத் துறைமுகத்தின் ஜெட்டியையும், அருகிலுள்ள நாகூர் சிதம்பரனார் ஆயில் ஜெட்டியையும் இணைத்து, கச்சா எண்ணெய் கையாளுவதற்கான ஒப்பந்தத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக துறைமுக நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது.

÷ஆனால், இதுபோன்ற விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதோடு சுற்றுச்சூழல் துறையின் பணி முடிந்துவிடாமல், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

÷துறைமுகச் செயல்பாட்டாலும், இங்கிருந்து வெளியே கொண்டுசெல்லப்படும் பொருள்களைக் கையாளுவோரின் அலட்சியத்தாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையினரோ, போக்குவரத்துத் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

÷அரசுக்கு துறைமுகத்தால் பெரிய லாபம் இல்லாத நிலையிலும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நேரடி, மறைமுக பயன்கள் பெரிய அளவு இல்லாத நிலையிலும், மக்கள் நலனை முன்னிறுத்தியே அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும்.

÷எனவே, காரைக்கால் மக்களைப் பாதிக்காத வகையில், அனைத்துத் துறையினருடன் கலந்தாலோசித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.