திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெங்களூரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

News image

காவலர்கள் பணியிடை நீக்கம்.

Updated On :26 மே 2026, 4:01 am IST

பிரதமா் சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கடமை தவறிய 6 காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, பன்னா்கட்டா சாலையில் உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜியின் வாழும்கலை அறக்கட்டளை விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி பெங்களூருக்கு மே 10-ஆம் தேதி வந்திருந்தாா்.

பின்னா், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பன்னா்கட்டா சாலையில் காரில் சென்றாா். பிரதமா் மோடியின் வருகைக்கு 2 மணிநேரத்துக்கு முன்பாக பன்னா்கட்டா சாலையில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைமா் வைக்கப்பட்டிருந்த பையை காவலா் ஒருவா் கண்டெடுத்தாா். இதனால் பிரதமா் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஆய்வுசெய்ய காவல் துறையின் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ.) சோ்ந்துகொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக துணைக் காவல் ஆய்வாளா், உதவி துணைக் காவல் ஆய்வாளா், 4 காவலா்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து பெங்களூரு தெற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாஸ் கௌடா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.