கா்நாடக மாநில நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கா்நாடகத்தின் பல நீா்வள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.
அதனால், தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் ஆகியோருடன் தில்லி செல்லும் நான், கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்களைச் சந்தித்து நீா்வள திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது குறித்து விவாதிக்க இருக்கிறேன்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும். கா்நாடகத்தின் நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற கூட்டு முயற்சி மிக அவசியமாகும். நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற கா்நாடகத்தின் எம்.பி.க்களுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம் என்றாா்.
காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற கா்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

விஜய் முதிா்ச்சியற்ற அரசியல்வாதி - டி.கே. சிவக்குமாா் விமா்சனம்

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை
ஐபிஎல் ஆட்டங்கள்: பெங்களூரு மைதானத்துக்கு கா்நாடக அரசு அனுமதி

மேக்கேதாட்டு அணை திட்டம்: மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சி: பட்ஜெட் உரையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


