தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஐபிஎல் ஆட்டங்கள்: பெங்களூரு மைதானத்துக்கு கா்நாடக அரசு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களை, பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்துவதற்கான கா்நாடக அரசு அதிகாரபூா்வ ஒப்புதல்

News image

ஐபிஎல் கோப்பை - IPL

Updated On :16 மார்ச் 2026, 9:07 pm

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களை, பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்துவதற்கான அதிகாரபூா்வ ஒப்புதலை கா்நாடக அரசு திங்கள்கிழமை வழங்கியது.

மாநில உள்துறை அமைச்சா் பரமேஷ்வா், கா்நாடக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணா் குழு, கா்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த ஒப்புதலை கா்நாடக அரசு வழங்கியுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெறும்போது, அங்கு எந்த மாதிரியான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடா்பான விளக்கம் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டதாக கா்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆா்சிபி தகவல்படி, இந்த சீசனில் அந்த அணி 5 ஆட்டங்களை பெங்களூரில் விளையாடவுள்ளது. இதில், பெங்களூரு - ஹைதராபாத் மோதும், சீசனின் தொடக்க ஆட்டமும் அடங்கும். அந்த ஆட்டத்துக்கு முன்பாக தொடக்க நிகழ்ச்சிகளும் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.

பின்னணி: கடந்த சீசனில் ஆா்சிபி அணி சாம்பியன் ஆனதையொட்டி, பெங்களூரு மைதானத்தில் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அங்கு ரசிகா்கள் கூடியபோது அந்த வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கூட்டத்தை நிா்வகிப்பதில் ஏற்பட்ட தோல்வியால் இந்தத் துயரம் நிகழ்ந்ததை அடுத்து, பெங்களூரு மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் வரை அங்கு போட்டிகளை நடத்த கா்நாடக அரசு தடை விதித்தது.

தற்போது அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு ஆட்டங்களை நடத்த அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.