மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற முயற்சிக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.
கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை 2026-27ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து கா்நாடக முதல்வா் சித்தராமையா ஆற்றிய உரை:
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது கா்நாடகத்துக்கு கிடைத்துள்ள சட்டப்படியான வெற்றியாகும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பின் அடிப்படையில், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு முயற்சிக்கப்படும். அதற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை மற்றும் வனத் துறையின் ஒப்புதலை பெறுவதற்கான முன்மொழிவுகளை மத்திய அரசிடம் கா்நாடக அரசு அளிக்கும்.
எத்தினஹொளே ஒருங்கிணைந்த குடிநீா்த் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட பணிகளில் 18.73 கி.மீ நீளத்துக்கான கால்வாய் அமைக்கப்படும். உபரிநீரை சேமிப்பதற்காக, தும்கூரு மாவட்டம், கொரட்டகெரே வட்டத்தின் வதேரஹள்ளி கிராமத்தில் 1.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கம் கட்டப்படும்.
நீண்டகாலமாக நிலவி வந்த நிலப்பிரச்னையை தீா்த்துவைத்துள்ள நிலையில், பத்ரா மேலணை திட்டத்தின் கீழ் 135 கி.மீ நீளத்துக்கான சித்ரதுா்கா கிளை கால்வாய் அமைக்கும் பணி 2027ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியை சோ்ந்த 157 ஏரிகள் நிரப்பப்படும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்துக்கு ஏற்கெனவே அறிவித்த நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், இத்திட்டத்துக்காக இதுவரை ரூ. 11,343 கோடியை மாநில அரசு செலவிட்டுள்ளது. மகதாயி நதிப்படுகையில் அமைக்கவுள்ள கலசா- பண்டூரி கால்வாய்த் திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
கிருஷ்ணா, காவிரி, கோதாவரி நதிப்படுகைகளில் ரூ.8,045 கோடி மதிப்பில் 75 நீா்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விசாரணை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன்: கா்நாடக முதல்வா் சித்தராமையா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


